வங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நெல்லையில் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

0 2408
வங்க கடலில் வலுப்பெற்றுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம்: நெல்லையில் ஆற்றங்கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்றுள்ளதன் காரணமாக, நெல்லை மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

பழுதடைந்த மற்றும் பாதுகாப்பில்லாத கட்டிடங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கேட்டுக்கொள்ளப்ட்டுள்ளது.

கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவைப்படும் பட்சத்தில் மாவட்ட நிர்வாகம் அறிவிக்கும் போது திசையன்விளை மற்றும் ராதாபுரம் தாலுகாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள பல்நோக்கு நிவாரண மையங்களில் தங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments