நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை... ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் கரை திரும்ப உத்தரவு

0 2108
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்களுக்கு எச்சரிக்கை... ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றவர்கள் கரை திரும்ப உத்தரவு

தூத்துக்குடியில் இருந்து கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் புயலுக்கு முன்பே 46 விசைப்படகுகளில் சென்ற தருவை குளம் மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப செயற்கைகோள் தொலைபேசி வழியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் இடிந்தகரை, கூத்தங்குழி, கூடுதாழை, உவரி, பெருமணல், கூட்டப்பனை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மீனவர்கள் மறு அறிவிப்பு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்லவேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்து உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments