2021 ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 - 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டம் - அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 25 முதல் 30 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டெல்லியில் பேசிய அவர், வரும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்திற்குள் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறினார்.
தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் கொரோனாதொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஒரு மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சம் தெரிவித்துள்ளது.
Comments