கணவர் உதைத்ததில் மனைவி பலி... ஆடு உதைத்ததாக நாடகமாடியவர் கைது.

0 2870
கொல்லத்தில் மனைவியை வயிற்றில் உதைத்து கொலை. கணவர் கைது.

கொல்லம் ஒய்யூரில்,   இளம்பெண்ணை  வயிற்றில் உதைத்துவிட்டு ஆடு உதைத்ததில் காயமடைந்ததாக நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  

கேரள மாநிலம் கொல்லத்தில் கரிக்கோம் என்ற ஊரை சேர்ந்த ஜார்ஜ் மற்றும்  ஷோபாவின் மகளான ஆஷா, வயிற்றில் கடுமையான காயங்களுடன் பாதிக்கப்பட்டு மெய்யனூர்  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஷாவின் கணவர் அருண் மேய்ச்சலுக்காக ஆடுகளை கூட்டிச்சென்றிருந்த போது , ஆடு உதைத்து பாறையிலிருந்து கீழே விழுந்து காயமடைந்ததாக கூறினார். எனினும்,  சிகிச்சை பலனளிக்காமல் நவம்பர் 4 ஆ ம் தேதி இறந்து விட்டார்.

ஆனால், ஆஷாவின் பெற்றோர், தங்கள் மகள் மரணத்தில் சந்தேகமிருப்பதாக காவல்துறையினரிடம் புகார் கொடுத்துள்ளனர். காவல் துறையினர் விசாரணையில், ஆஷாவின் உடலில் கீழே விழுந்ததற்கான அடையாளங்கள் எதுவுமில்லை. பிரேத பரிசோதனையிலும் வயிற்றில் மட்டுமே பலமாக அடிப்பட்ட காயங்கள் இருந்தது தெரிய வந்தது. 

அதனால் போலீசார், ஆஷாவின் இரு குழந்தைகளிடமும், கணவர் அருணின் தாயாரிடத்திலும் தீவிரமாக விசாரணை நடத்தினர். அப்போது,கணவர் அருண் , இரவு குடித்து விட்டு வந்து, மனைவி ஆஷாவின் வயிற்றில் காலால் உதைத்ததும்  ஆஷா மயங்கி விழவே, ஆடு உதைத்ததாக பொய் கூறி மருத்துவமனையில் சேர்த்ததும் தெரிய வந்தது. தொடர்ந்து  போலீசார் ,  கணவர் அருணை கைது செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments