2300 கோடி முறைகேடு - மணல் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

0 2472
2300 கோடி முறைகேடு - மணல் லாரி உரிமையாளர்கள் குற்றச்சாட்டு

லாரிகளில் பொருத்தப்படும் ஜிபிஎஸ்,  வேக  கட்டுப்பாட்டு கருவி உள்ளிட்டவற்றை  8 நிறுவனங்களிடம் மட்டுமே வாங்க வேண்டும்  என்ற உத்தரவால் சுமார் 2300 கோடி ரூபாய் முறைகேடு நடைபெறுவதாக மணல் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

தமிழ்நாடு மாநில மணல் உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, லாரிகளில் பொருத்தப்படும் ஜிபிஎஸ், ஒளிரும் பட்டைகள், வேகக்கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளிட்டவற்றை குறிப்பிட்ட 8 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார். 140 நிறுவனங்கள் இந்த பொருட்களை தயாரிக்கும் நிலையில், 8 நிறுவனங்களிடம் இருந்து மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவு ஏன் என அவர் கேள்வி எழுப்பினார்.

மற்ற நிறுவனங்களின் தயாரிப்பு தரமற்றவை எனில் அந்த நிறுவனங்களை தடை செய்து சீல் வைக்க அரசு தயங்குவது ஏன் எனவும் அவர் கேட்டார். தமிழகத்தில் 12 லட்சம் கனரக மற்றும் இலகுரக வர்த்தக வாகனங்கள் உள்ளன, இவற்றிற்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு FC எனப்படும் தகுதிச் சான்றிதழ் பெறச் செல்லும் போது, ஒளிரும் பட்டை, வேக கட்டுப்பாட்டு கருவி, ஜிபிஎஸ் கருவி பொருத்தி இருந்தால் மட்டுமே தரச்சான்றிதழ் FC வழங்கப்படுகிறது என்பதையும் யுவராஜ் விளக்கின

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments