திடீர் சுற்றுலாத்தலமாக மாறிய விரிஞ்சிபுரம் பாலாறு தரைபாலம் - வேலூர்
வேலூர் மாவட்டத்திலுள்ள விரிஞ்சிபுரம் பாலாறு தரைப் பாலம் இப்போது சுற்றுலாத்தலம் போல மாறியிருக்கிறது.
நிவர் புயலின் காரணமாக பெய்த கன மழையால் பல்வேறு மாவட்டங்களில் நீர் நிலைகளிலில் தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் வெளுத்து வாங்கிய கன மழையால், அங்குள்ள காட்டாறுகள், மற்றும் மோர்தனா அணையில் இருந்து
வெளியேறும் நீர் ஆகியவை பாலற்றில் ஆர்ப்பரிக்கும் வெள்ளமாக கடந்த 4 நாட்களாக சென்று கொண்டு இருந்தது.
இதனால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் விரிஞ்சிபுரம் பாலாறு தரைப்பாலத்திற்கு மேலே தண்ணீர் சென்றதால்
அந்த பகுதியின் போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த நிலையில் நேற்று முதல் தண்ணீர் வரத்து குறைந்து காணப்பட்டதால் பாலத்திற்கு கீழ் தண்ணீர் ஓட தொடங்கியது.
தொடர்ந்து பாலத்தில் போக்குவரத்து மீண்டும் ஓட தொடங்கியது.
இந்த நிலையில், வேலூர் சுற்று வட்டாரத்தில் உள்ள, செதுவாலை, விரிஞ்சிபுரம், பொய்கை, போன்ற பகுதிகளில் வசிக்கும் மக்கள்
மற்றும் விரிஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் சுற்றுலா வருபவர்கள் , இளைஞர்கள் விரிஞ்சிபுரம் தரைப் பாலத்தில் இறங்கி ஆனந்தக் குளியல் போட்டுவிட்டு ஜாலியாக தண்ணீர் செல்வதை ரசித்த வண்ணம் இருக்கிறார்கள். இதனால், அந்த இடம் தற்போது சுற்றுலாத்தலம் போல் காட்சி அளிக்கிறது.
Comments