ஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற, தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் : இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம்

0 1597
ஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற, தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் : இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம்

ஜம்மு காஷ்மீர் குறித்த தேவையற்ற, தவறான தகவல்களை வெளியிட வேண்டாம் என OIC எனப்படும் இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பிற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் நைகரில் நடந்தது. அதில் ஜம்மு காஷ்மீர் குறித்து, பாகிஸ்தானுக்கு ஆதரவான தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவு அமைச்சகம், இந்த விவகாரத்தில் எந்த தொடர்பும் இல்லாத OIC அமைப்பு இது போன்ற அத்துமீறலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என கூறியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும் இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிட வேண்டாம் எனவும் அந்த அமைப்புக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments