2014-2020 காலக்கட்டத்தில் 18,065 கி.மீ. ரயில் பாதை மின்மயமாக்கல் - அமைச்சர் பியூஷ் கோயல்
பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியில் ஆறாண்டுகளில் 18 ஆயிரம் கிலோமீட்டர் ரயில்பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் புதிதாக மின்மயமாக்கப்பட்ட பாதையைத் தொடங்கி வைத்துப் பேசிய அவர், 2008 முதல் 2014 வரையிலான ஆறாண்டுகளில் மூவாயிரத்து 835 கிலோமீட்டர் நீளத்துக்கு ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதாகவும், பிரதமராக மோடி பொறுப்பேற்றபின் ஆறாண்டுகளில் 18 ஆயிரத்து 65 கிலோமீட்டர் நீளப் பாதைகள் மின்மயமாக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இந்திய ரயில்வேயில் மொத்தம் 41 ஆயிரத்து 500 கிலோமீட்டர் மின்மயமாக்கப்பட்ட ரயில்பாதைகள் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
Comments