இந்தியா , வங்கதேசத்தின் எதிர்ப்பையும் மீறி பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் திட்டத்தில் சீனா தீவிரம்
இந்தியா மற்றும் வங்கதேசத்தின் எதிர்ப்பையும் மீறி பிரம்மபுத்திரா நதியில் அணை கட்டும் திட்டத்தில் சீனா தீவிரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிழக்கு லடாக் எல்லையில் பதற்றம் நீடிக்கும் நிலையில், போரைத் தூண்டும் நடவடிக்கைகளில் சீனா தொடர்ந்து ஈடுபடுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இந்த நிலையில், திபெத்தில், பிரம்ம்புத்திரா நதியின் குறுக்கே நீர்மின் திட்டத்திற்கான அணையை கட்டுவதில் இருந்து பின்வாங்கப்போவதில்லை என சீனாவின் மின் உற்பத்தித் துறைத் தலைவர் யான் ஷியோங் (Yan Zhiyong) தெரிவித்துள்ளார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள இந்தியாவும், வங்க தேசமும், இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால், பிரம்ம்புத்திராவின் கரையில் உள்ள தங்களது பகுதிகள் பாதிக்கப்படும் என சீனாவிடம் வலியுறுத்தியுள்ளன.
Comments