அண்ணா பல்கலைக்கழகம் ரத்து செய்த தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும் - உயர்நீதிமன்றம்
ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலிக்கும் அண்ணா பல்கலைகழக பதிவாளரின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தேர்வு நடத்தப்படாத நிலையில் ஒரு விடைத்தாள் திருத்த 42 ரூபாய் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு, 4 லட்சம் மாணவரிடமிருந்து 13 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகளில் பயிலும் மாணவர்களிடம் சுமார் 100 கோடி ரூபாய் அளவுக்கு தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் மனுதாரர்கள் வாதிட்டனர்.
தேர்வுகள் வழக்கம் போல நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், விடைத்தாள் திருத்தும் செலவை தவிர மற்ற அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், அதன்படி ஒரு மாணவரின் ஒரு தேர்வுக்கு 126 ரூபாய் செலவாகியுள்ளதாக பல்கலைக்கழகம் தெரிவித்தது.
இந்த வாதத்தை ஏற்று, மனுக்களை தள்ளுபடி செய்த நீதிபதி, ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் வசூலித்தது செல்லும் என உத்தரவிட்டார்.
Comments