இந்தோனேசியாவில் எரிமலை வெடித்துச் சிதறியது
இந்தோனேஷியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அதனருகில் வசித்த கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேர் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஈஸ்ட் நுஸா மாகாணத்தில் உள்ள ஐலி லெவொடோலாக் என்ற எரிமலை தனது வெடிப்பைத் தொடங்கியுள்ளது.
எரிமலையில் இருந்து எழுந்த புகையும், சாம்பலும் சுமார் 4 கிலோ மீட்டர் உயரத்திற்கு விசிறியடிக்கப்பட்டது. இதையடுத்து சுமார் 26 கிராமங்களைச் சேர்ந்த 3 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
JUST IN: Video of the eruption of Ile Lewotolok volcano on Sunday morning, 29 November 2020, in Lembata Island, East Nusa Tenggara. pic.twitter.com/NZXeZmNCU7
— Alex Journey (@alexjourneyID) November 29, 2020
Comments