ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் கோலாகலம்

0 1646
ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கார்த்திகை தீப உற்சவம் கொண்டாடப்பட்டது. கோயிலில் உள்ள யோக நரசிம்மர் சுவாமி சன்னதி அருகே உள்ள பரிமள மண்டபத்தில் நூறு தீபங்கள் ஏற்றப்பட்டன.

பின்னர் கருவறையில் உள்ள அகண்ட தீபம், குலசேகர படி, துவாரபாலகர்கள், கருடாழ்வார் சன்னதி, வரதராஜ சுவாமி சன்னதி, தங்க கிணறு, யோக நரசிம்ம சுவாமி சன்னதியில் தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிகழ்வில் திருமலை ஜீயர்கள், அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோயில் வளாகத்தில் 1,008 அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments