ரஜினி உள்பட தமிழகத்தில் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கியை சிதறடிக்க முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ

0 2298
ரஜினி உள்பட தமிழகத்தில் யார் கட்சி ஆரம்பித்தாலும் அதிமுகவின் வாக்கு வங்கியை சிதறடிக்க முடியாது : அமைச்சர் கடம்பூர் ராஜூ

ரஜினி உள்பட தமிழகத்தில் யார் கட்சி ஆரம்பித்தாலும், அதிமுகவின் வாக்கு வங்கியை சிதறடிக்க முடியாது என்று செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கூட சிலர் கட்சி ஆரம்பித்தனர் என்றார்.

அதே நிலை தான் தற்போது தொடருவதாக கூறிய கடம்பூர் ராஜூ, அதிமுகவின் வாக்கு வங்கி, சிந்தாமல்- சிதறாமல் உள்ளதாக தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments