எல்லையில் நள்ளிரவில் கிராம பகுதிகளை நோக்கி பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தக்க பதிலடி

0 2302
எல்லையில் நள்ளிரவில் கிராம பகுதிகளை நோக்கி பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்... இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் தக்க பதிலடி

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் கிராம பகுதிகளை குறிவைத்து நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்திய நிலையில், இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

கத்துவா மாவட்டம் ஹிராநகருக்குட்பட்ட கிராமங்களை நோக்கி பாகிஸ்தான் ராணுவம் நேற்றிரவு 9.50 மணியளிவில் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இதற்கு இந்திய எல்லை பாதுகாப்பு படைவீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.

இன்று அதிகாலை 4.15 மணி வரை மோதல் நீடித்த நிலையில், இதில் இந்திய தரப்பில் யாருக்கும் எந்த பாதிப்பு ஏற்படவில்லை. கடந்த 8 மாதங்களாக எல்லையில் உள்ள கிராம பகுதிகளை பாகிஸ்தான் ராணுவம் தாக்கி வருவது குறிப்பிடதக்கது.

இதனிடையே ஜம்மு மாவட்டத்தின் அர்னியா செக்டார் பகுதியில் பாகிஸ்தான் டிரோன் அத்துமீறி உள்ளே நுழைந்த நிலையில், இந்திய வீரர்கள் அதனை நோக்கி சுட்டதை அடுத்து அந்த ட்ரோன் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments