திருக்கார்த்திகை திருநாளையொட்டி மலைக்கோவில்களில் கார்த்திகை தீபம்

0 3095
திருக்கார்த்திகை திருநாளையொட்டி மலைக்கோவில்களில் கார்த்திகை தீபம்

திருக்கார்த்திகை திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டை, திருத்தணி, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட  மலைக்கோவில்கள் ஆகிய கோவில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள உச்சிபிள்ளையார் கோவிலில் திருக்கார்த்திகை திருநாளையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக திருப்பரங்குன்றம் கோவில் வளாகத்தில் உள்ள உற்சவருக்கு பாலதீபம் ஏற்றப்பட்டது. இதனையடுத்து மலை மேல் மூன்றரை அடி உயர கொப்பறையில், 300 கிலோ நெய் ஊற்றி, 5 கிலோ கற்பூரம் வைத்து, 160 மீட்டர் காடா துணியுடன் கொண்ட திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் திருக்கார்த்திகை திருநாளையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக கோயில் சன்னதியில் மட்டுவார் குழழம்மை, தாயுமான சாமி, விநாயகர், சுப்ரமணியர் , சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகளின் ஊர்வலம் நடைபெற்றது. இதனையடுத்து மலை உச்சியில் பிரம்மாண்ட கொப்பரையில் 900 லிட்டர் நல்லெண்ணை, நெய், இலுப்பை எண்ணெணை ஆகியவை ஊற்றப்பட்டு 300 மீட்டர் பருத்தி திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

பழனி முருகன் கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழாவைவையொட்டி மகாதீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக விநாயகர், முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து மலை மீது மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னர் பனை ஓலைகளால் உருவாக்கப்பட்டிருந்த சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. 

திருக்கார்த்திகை திருநாளையொட்டி திருத்தணி முருகன் கோயில் எதிரே உள்ள பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றபப்ட்டது. முன்னதாக உற்சவர் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன், வெள்ளிமயில் வாகனத்தில் எழுந்தருளி கோவில் நுழைவாயில் முன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனையடுத்து கோவிலின் எதிரில் உள்ள பச்சரிசி மலையில் பெரிய அகல் விளக்கில், 100 கிலோ நெய் ஊற்றப்பட்டு 25 மீட்டர் நீளமுள்ள திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

திருக்கார்த்திகை திருநாளையொட்டி நெல்லை நெல்லையப்பர் கோவிலில் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக மஹா ஹோமங்களும், மாலையில் சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதனையடுத்து சுவாமி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி சன்னதி தெருவில் அமைந்துள்ள சொக்கப்பனை மூக்கிற்கு ஊர்வலமாக  அழைத்து வரப்பட்டது . இதனையடுத்து மகா ருத்ர தீபமான சொக்கப்பனை ஏற்றப்பட்டது

திருக்கார்த்திகை திருநாளையொட்டி சேலம் மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள கந்தாஸ்ரமம் முருகன் ஆலயத்தில்  கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. இதேபோல் சேலம் காசி விஸ்வநாதர் ஆலயம், காவடி பழனி ஆண்டவர் ஆலயம், அம்மாபேட்டை சிவ சக்தி விநாயகர் ஆலயம் உள்ளிட்ட கோவில்களிலும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. 
 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments