இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது ஆஸ்திரேலியா

0 5026
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வென்றது ஆஸ்திரேலியா

சிட்னியில் இன்று நடைபெற்ற 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்று இந்தியாவுக்கு எதிரான போட்டித் தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியுள்ளது.

முதலில் பேட்டிங் செய்த அந்த அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. 50 ஓவர்களில் அந்த அணி 4 விக்கெட் இழப்புக்கு 389 ரன்கள் குவித்தது. தொடரில் 2ஆவது சதம் விளாசிய ஸ்டீவ் ஸ்மித் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு மயங்க் அகர்வால், தவன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் கேப்டன் கோலி அதிரடி காட்டவே சிறிது நம்பிக்கை ஏற்பட்டது. எனினும் அவர் 89 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களில் கே.எல்.ராகுல் மட்டும் அதிரடியாக 76 ரன்கள் விளாசினார். 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 338 ரன்களை மட்டுமே இந்திய அணி எடுத்தது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments