நடிகர் விஜய் புதிதாக VMI என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கவுள்ளதாக தகவல்...

0 6662
நடிகர் விஜய் புதிதாக VMI என்ற பெயரில் யூடியூப் சேனல் தொடங்கவுள்ளதாக தகவல்...

நடிகர் விஜய் விரைவில் புதிதாக யூடியுப் சேனல் தொடங்கவிருப்பதாக அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார்.

அண்மையில் அ.இ.த.வி.ம.இ. கட்சி தொடங்கியதில் தந்தை எஸ்.ஏ.சி.க்கும், நடிகர் விஜய்க்கும் மோதல் போக்கு நிலவியதாக கூறப்பட்ட நிலையில், தனது ரசிகர் மன்றத்தை அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் என பெயர் மாற்றி, புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்ததாக தகவல் வெளியானது.

அதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக ரசிகர்களையும், மன்ற நிர்வாகிகளியும் உற்சாகப்படுத்த நடிகர் விஜய் யூடியூப் சேனல் ஆரம்பிக்க உள்ளதாக அவரது ரசிகர் மன்ற பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் ட்விட் செய்துள்ளார்.

விஜய் மக்கள் இயக்கம் என்பதின் ஆங்கில சுருக்கமாக, VMI என்ற பெயரில் சேனல் தொடங்கப்படவுள்ளதாகவும் அந்த டுவிட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும், சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிர்ந்து வருகின்றனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments