சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் சிஆர்பிஎஃப் அதிகாரி உயிரிழப்பு

0 1382
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் சிஆர்பிஎஃப் அதிகாரி உயிரிழப்பு

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் சக்தி வாய்ந்த வெடிகுண்டை வெடிக்க வைத்ததில் சிஆர்பிஎஃப் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார்.

சிஆர்பிஎஃப்-ன் வனப்பிரிவான கோப்ராவின் 206 ஆவது பட்டாலியனை சேர்ந்தவர்கள் அரவ்ராஜ் மேத்தா மலைப்பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.

அதில் பலத்த காயமடைந்த உதவி கமாண்டன்ட் நிதின் பாலேராவ் என்பவர் ராய்ப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் ஏழு ஜவான்கள் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments