உளவுத்துறை தகவல் பரிமாற்றம் - இந்தியா-இலங்கை- மாலத்தீவு உடன்படிக்கை
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இலங்கையில் பிரதமர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசியதை அடுத்து இந்தியா, இலங்கை, மாலத்தீவு ஆகிய நாடுகளிடையே தீவிரவாதம், போதைப் பொருள் கடத்தல், மனித கடத்தல், பணப் பரிமாற்றம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான உளவுத்துறை தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு செயலர் மேஜர் ஜெனரல் கமல் குணாரந்தேவை நேற்று சந்தித்து பேசிய அஜித் தோவல் இதனை தெரிவித்துள்ளார். மூன்று நாடுகள் சார்பிலும் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியப் பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்துள்ள நிலையில், மீன்பிடிப் படகுகள் எனக் கூறிக் கொண்டு சீனாவின் ஆழ்கடல் மீன்பிடிப்படகுகள் இந்தியாவை உளவு பார்ப்பதாக புகார்கள் எழுந்த நிலையில் இந்த உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Comments