கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி பெறப்படும் - சீரம் இந்தியா தகவல்
கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவதற்காக 2 வாரங்களில் மத்திய அரசின் அனுமதி கோரப்படும் என சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புனேவில் உள்ள இந்த நிறுவனத்தில், ஆக்ஸ்போர்டு பல்கலைகழகம் மற்றும் ஆஸ்ட்ரோஜெனகாவின் தடுப்பூசியான கோவிஷீல்டு உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
நேற்று அங்கு சென்ற பிரதமர் மோடி, தடுப்பூசி நிலவரம் குறித்து சீரம் இந்தியா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், அவசரகால அனுமதிக்கு விண்ணப்பிக்க உள்ளதாக தெரிவித்துள்ள சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா, தடுப்பூசி பயன்பாட்டில் உள்நாட்டு பயன்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Comments