ஸ்பெயினில் நடுக்கடலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை துரத்தி பிடித்த கடலோர காவல் படையினர்
ஸ்பெயின் நாட்டில் திரைப்படத்தில் வரும் சேசிங் காட்சியை போன்று நடுக்கடலில் போதை கும்பல் ஒன்றை ஸ்பெயின் கடலோர காவல் படையினர் அதிவேக படகில் சென்று துரத்தி பிடிக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.
தென்கிழக்கு கடல் பகுதியான Cartagenaவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடலோர காவல் படை படகை கண்ட போதைப் பொருள் கடத்தல் கும்பல் தங்கள் படகில் வைத்திருந்த hashish போதைப் பொருள் மூட்டையை ஒவ்வொன்றாக கடலில் எறிந்த படி படகை வேகமாக செலுத்தி கொண்டிருந்தது.
ஆனால் ஸ்பெயின் கடலோர காவல் படையினர் விடாமல் துரத்தி சென்று அந்த படகை பிடித்து 66 மூட்டை போதைப் பொருளை கைப்பற்றியது மட்டுமின்றி 5பேரை கைது செய்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த போதைப் பொருள் மொரோக்காவில் இருந்து கடத்தி வரப்பட்டு ஸ்பெயினில் உள்ள Valenciaவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரிய வந்தது.
Comments