டிசம்பர் 1, 2 தேதிகளில் கேரளாவில் பலத்த மழை பெய்யும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
அந்தமான் கடல்பகுதி மற்றும் வங்கக்கடலை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளதையடுத்து கேரளாவில் டிசம்பர் 1,2 தேதிகளில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த வாரம் கேரளாவின் பத்தனம்திட்டா, ஆழப்புழை, கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடுக்கி உள்ளிட்ட சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் ,திருவனந்தபுரம், கொல்லம், உள்ளிட்ட சில பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு நிலை வலுப்பெற்று டிசம்பர் 2ம் தேதிக்கு தென் தமிழகத்தை நோக்கி நகரும் என்றும் வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments