கார்லோன் மோசடி : சிக்கிய கார் பந்தய வீரர்

0 4079
சென்னையில் பல்வேறு வங்கிகளில் வாகன கடன் மோசடியில் ஈடுபட்டு கைதான பால விஜய், பிரபல கார்பந்தய வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் பல்வேறு வங்கிகளில் வாகன கடன் மோசடியில் ஈடுபட்டு கைதான பால விஜய், பிரபல கார்பந்தய வீரர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னையில் போலி ஆவணங்கள் கொடுத்து பல்வேறு வங்கிகளில் வாகன கடன் வாங்கி மோசடி செய்ததில், நீலாங்கரையை சேர்ந்த முகமது முசாமில், அய்யாதுரை, பால விஜய் ஆகிய 3 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டவர்களில் பால விஜய் என்பவர் பிரபல கார் பந்தய வீரர் என்பதும், 2010 முதல் 2014 காலகட்டத்தில் இந்திய அளவிலான பல கார் பந்தயங்களில் பங்கு பெற்றதோடு, கார் பந்தயங்களுக்கான லீக் ஆட்டங்களில் மோட்டோ ரேவ் என்ற அணியை உருவாக்கி அதன் உரிமையாளராகவும், கார் பந்தய வீரராகவும் பால விஜய் இருந்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் மோசடி விவகாரத்தில் மூளையாக செயல்பட்டதும் பால விஜய் தான் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வங்கி மேலாளர் மற்றும் கார் டீலர் இருவரது உடந்தையுடன் பால விஜய் பல சொகுசு கார்களுக்கு லோன் வாங்கி மோசடி செய்தது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக ஆடி, பிஎம்டபிள்யூ போன்ற சொகுசு கார்களை மட்டுமே வாங்க வங்கி கடன் வாங்கியதும், சொகுசு கார் வாங்கும் அளவிற்கு வசதியானவர் எனக் காட்ட, சினிமா சூட்டிங் பங்களாக்களையும், கார்களையும் வாடகைக்கு எடுத்து வங்கிகளை நம்ப வைத்ததெல்லாம் பால விஜய் தான்.

இவர் கார் பந்தய வீரர் என்பதாலும் வங்கிகள் நம்பி கடன் அளித்துள்ளன.

இதுதவிர இந்த மோசடிக்கு உடந்தையாக வங்கி இடைத்தரகர் ஒருவர் இருந்ததால், கார் லோன் அளித்த வங்கிகளுக்கு சந்தேகம் வராமல் சொகுசு கார்களுக்கான கடனை மோசடி செய்து பெற்றுள்ளனர்.

வாங்கிய 20 நாட்களிலேயே சொகுசு கார்களில் ஏதாவது குறை ஒன்றை தெரிவித்து, பால விஜய் சொகுசு கார்களை திருப்பி அனுப்பிவிடுவார்.

இதனையடுத்து, கார் ஷோரூம் மூலம் பணம் மீண்டும் பால விஜய் வங்கி கணக்கிற்கு சேர்ந்து விடுவதால், அதை 80 சதவீதம் பால விஜய், அய்யாதுரை, முகமது முசாமில் எடுத்துக்கொண்டு, உடந்தையாக இருந்த கார் டீலர் மற்றும் வங்கி இடை தரகர் 20 சதவீதம் எடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய கார் டீலர் மற்றும் வங்கி இடைத் தரகரை ஆதாரங்களுடன் கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் கைதான கார் பந்தய வீரர் பால விஜய், தரகர் அய்யாதுரை மற்றும் முகமது முசாமில் ஆகியோரை காவலில் எடுத்து விசாரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments