8 கோடி வாக்குகள் சரியானவை என்று ஜோ பைடன் நிரூபித்த பின்னர் தான், வெள்ளை மாளிகைக்குள் வர முடியும் - டிரம்ப்

0 10536
8 கோடி வாக்குகள் சரியானவை என்று ஜோ பைடன் நிரூபித்த பின்னர் தான், வெள்ளை மாளிகைக்குள் வர முடியும் - டிரம்ப்

ஜோ பைடன் பெற்ற எட்டு கோடி வாக்குகள் சரியானவை என்று சட்டரீதியாக நிரூபித்த பின்னர் தான், வெள்ளை மாளிகைக்குள் அவர் வர முடியும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், டெட்ரோய்ட், அட்லாண்டா, பிலடெல்பியாவில் வாக்கு எண்ணிக்கையின் போது பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி இருக்கிறார்.

பென்சில்வேனியாவில் ஜோ பைடனின் வெற்றிக்கு எதிராக டிரம்ப் தரப்பு தாக்கல் செய்த மனுவை அமெரிக்க மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட பின் டிரம்ப் இந்த கருத்தை கூறியுள்ளார்.

இதனிடையே தேர்தல் தோல்வியை ஒப்புக் கொள்ள மறுத்து வரும் டிரம்ப், அதிபர் தேர்தல் மிகவும் பாதுகாப்பான முறையில் நடைபெற்றதாக கூறிய சைபர் பாதுகாப்பு உயர் அதிகாரியை பணிநீக்கம் செய்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments