ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு - 50 வீடுகளை சூழ்ந்த வெள்ளம்
ஆரணி ஆற்றங்கரையில் உடைப்பு ஏற்பட்டு திருவள்ளூர் மாவட்டம் பிரளயம்பாக்கத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்து, முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
பிச்சாட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரால், ஆரணியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தத்தைமஞ்சி அருகே ஆரணியாற்றின் கரையில் உடைப்பு ஏற்பட்டு பிரளயம்பாக்கத்தில் சுமார் 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்குள்ளவர்கள், பாதுகாப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
1000-த்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதேபோன்று, திருத்தணியில் கனமழை காரணமாக, 100 ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
Comments