கால்நடைகளை ரயில் பாதையோரங்களில் தீவனத்துக்காக மேய விடுவது அவற்றைக் கொலை செய்வதற்குச் சமம் -ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர்

0 2065
கால்நடைகளை ரயில் பாதையோரங்களில் தீவனத்துக்காக மேய விடுவது அவற்றைக் கொலை செய்வதற்குச் சமம் என ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் ராஜு தெரிவித்துள்ளார்.

கால்நடைகளை ரயில் பாதையோரங்களில் தீவனத்துக்காக மேய விடுவது அவற்றைக் கொலை செய்வதற்குச் சமம் என ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆணையர் ராஜு தெரிவித்துள்ளார்.

ரயில் பாதைகளில் கால்நடைகள் குறுக்கிடுவதால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்கும் வகையில், சென்னை வில்லிவாக்கத்தில் பயிலரங்கம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய ரயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி ராஜு, தண்டவாளப் பகுதிக்குப் புல் மேய வரும் கால்நடைகளால், ரயிலே தடம் புரண்டு பெரும் விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்படுவதாகத் தெரிவித்தார்.

ரயில் பாதையோரங்களில் பசும்புற்களை மேய்வதற்காகக் கால்நடைகளை அவிழ்த்து விடும் உரிமையாளர்களுக்கு இரண்டாயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாதக் காலச் சிறைத் தண்டனையும் விதிக்கச் சட்டத்தில் இடமுள்ளதாகத் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments