இந்தியத் தரக் கட்டுப்பாட்டு சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே தயாரிக்க, விற்க வேண்டும்-மத்திய அரசு

0 1615

இந்தியத் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே தயாரிக்கவும், விற்கவும் வேண்டும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளைத் தடுப்பது குறித்துச் சாலைப் பாதுகாப்புக்கான குழு ஆராய்ந்து அரசுக்குப் பரிந்துரைத்துள்ளது.

இந்தியத் தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் சான்று பெற்ற, எடை குறைந்த, உறுதியான தலைக்கவசங்களை இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்காகத் தயாரித்து விற்க வேண்டும் எனப் பரிந்துரையில் குறிப்பிட்டுள்ளது.

அதை ஏற்றுக் கொண்ட சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், பிஐஎஸ் சான்று பெற்ற தலைக்கவசங்களை மட்டுமே விற்க வேண்டும் என்பதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments