ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட்-இந்திய அணி வீரர்களுக்கு அபராதம்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக இந்திய அணி வீரர்களுக்கு ஐசிசி அபராதம் விதித்துள்ளது.
நேற்று சிட்னியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பந்து வீசிய இந்திய அணி 50 ஓவர்களை வீசி முடிக்க 4 மணி நேரம் 6 நிமிடங்கள் எடுத்துக்கொண்டது.
இது அனுமதிக்கப்பட்ட கால அளவை விட கூடுதல் நேரம் என்பதால், ஐசிசி நடத்தை விதிகளின்படி இந்திய அணி வீரர்களுக்கு ஆட்டத்திற்கான ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
India players have been fined for maintaining a slow over-rate in their 1st ICC Men's @cricketworldcup Super League ODI against Australia.
— ICC (@ICC) November 28, 2020
Details ?
Comments