ஐதராபாத் விமான நிலையத்தில் இணையதளம் வாயிலாக டிராலிகளை கையாளும் தொழில்நுட்பம்
IOT எனப்படும் இணையதள நுட்பம் வாயிலாக ஐதராபாத் சர்வதேச விமான நிலைய செயல்பாடுகளை மேம்படுத்த, அதை நிர்வகிக்கும் ஜிஎம்ஆர் குழுமம் முடிவு செய்துள்ளது.
அதன் முதல் படியாக ஸ்மார்ட் பேக்கேஜ் டிராலி மேனேஜ்மென்ட் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் விமான நிலையத்தில் உள்ள 3000 டிராலிகளும் இணைக்கப்பட்டு அவற்றின் பயன்பாடு நிர்வகிக்கப்படும்.
இதனால் டிராலிகளின் இருப்பிடத்தை ரியல் டைமில் தெரிந்து கொள்ளப்பட்டு, பயணிகள் தேவையின்றி காத்திருக்கும் நிலைமை தவிர்க்கப்படும் என ஜிஎம்ஆர் குழுமம் தெரிவித்துள்ளது.
அதே போன்று டிராலிகள் விமான நிலைய பகுதிக்கு வெளியே கொண்டு செல்லப்பட்டால், அதன் இருப்பிடத்தை அறிந்து கொள்ளும் வகையில் எச்சரிக்கை மணி அடிப்பதற்கான தொழில்நுட்பமும் டிராலிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Comments