நிலக்கரி திருட்டு, சட்டவிரோத சுரங்கம் தொடர்பான வழக்கு : 4 மாநிலங்களில் 45 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை
சட்டவிரோத நிலக்கரி வெட்டுதல் மற்றும் நிலக்கரி திருட்டு தொடர்பான வழக்குகளில், சிபிஐ 45 இடங்களில் மெகா அதிரடி சோதனையை நடத்துகிறது.
ஈ.சி.எல் எனப்படும் ஈஸ்ட்டர்ன் கோல்பீல்டு லிமிட்டெட்டுக்கு சொந்தமான கனுஸ்டோரியா மற்றும் கஜோரியா நிலக்கரி வயல்களில் (Kunustoria and Kajoria) சட்ட விரோத நிலக்கரி வெட்டுதல் நடப்பதாக வழக்குகள் பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக ஈசிஎல்லின் இரண்டு மூத்த அதிகாரிகள்,சில ரயில்வே அதிகாரிகள் மேலும் பல நிறுவனங்கள் மீது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம், ஜர்க்கண்ட் மற்றும் பீகாரில் இவர்களுக்கு தொடர்புடைய 45 இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Comments