நடப்பாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு - புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் சேர்க்க உத்தரவிடக்கோரி வழக்கு

0 1594
நடப்பாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு - புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் சேர்க்க உத்தரவிடக்கோரி வழக்கு

நடப்பாண்டிற்கான மருத்துவ கலந்தாய்வில், புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் சேர்க்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

இது குறித்த பொதுநல மனுவில், புதிதாக நிறுவப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகள் நடப்பாண்டுக்கான மருத்துவ கலந்தாய்வு பட்டியலில் சேர்க்கப்படும் என கடந்த செப்டம்பர் மாதம் அரசு அறிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

ஆனால், கலந்தாய்வு பட்டியலில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மருத்துவ கல்லூரிகள் சேர்க்கப்படவில்லை என்றும், நிவர் புயல் காரணமாக தற்போது மருத்துவ கலந்தாய்வு தள்ளிவைக்க பட்டுள்ள சூழலில், புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 அரசு மருத்துவ கல்லூரிகளையும் சேர்க்க உத்தரவிட வேண்டும் என மனுதாரர் கூறியிருந்தார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments