பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து உபரிநீர் வெளியேற்றம் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடியாக குறைப்பு
திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி ஏரி நீர்மட்டம் உயர்ந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இன்று காலை வினாடிக்கு 6ஆயிரம் கன அடி வீதமாக இருந்த உபரிநீர் வெளியேற்றம், நீர்வரத்து குறைவு காரணமாக பிற்பகலில் 3ஆயிரம் கன அடிவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக உள்ள 16 மதகுகளில் 6 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 3ஆயிரம் கன அடி வீதமாக குறைந்துள்ளது
Comments