சென்னை ராஜீவ்காந்தி சாலையில் சுங்கச்சாவடிகளில் Fastag முறை செயல்படாததால் வாகன ஓட்டுநர்கள் அவதி

0 1705
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் சுங்கச்சாவடிகளில் Fastag முறை செயல்படாததால் வாகன ஓட்டுநர்கள் அவதி

சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் Fastag முறை செயல்படாததால் வாகன ஓட்டுநர்கள் அதிக நேரம் காத்திருப்பதுடன் கூடுதல் கட்டணம் செலுத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைச் சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை இணையவழியில் செலுத்துவதற்காக பாஸ்டேக் முறை செயல்பாட்டில் உள்ளது. இந்நிலையில் சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள 4 சுங்கச் சாவடிகளிலும் Fastag முறை கடந்த 6 நாட்களாகச் செயல்படவில்லை.

இதனால் வாகன ஓட்டுநர்கள் பணமாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியுள்ளதால் அதிக நேரம் காத்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

பாஸ்டேக் முறைக்கான மென்பொருளில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், அதைச் சரிசெய்ய ஒரு வாரம் வரை ஆகும் எனவும் சுங்கச்சாவடி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments