பாலாற்றில் வெள்ளப்பெருக்கு : வாலாஜாபாத் - அவலூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது

0 3108
பாலாற்றில் வெள்ளப்பெருக்கு : வாலாஜாபாத் - அவலூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது

பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் - அவலூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.

நிவர் புயலால் ஆந்திரத்தின் சித்தூர் மாவட்டத்திலும், தமிழகத்தின் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும் கனமழை பெய்ததால் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

நொடிக்கு நாற்பதாயிரம் கன அடிநீர் பாலாற்றில் பாய்வதால் வாலாஜாபாத் - அவலூர் இடையே உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியுள்ளது.

அந்தப் பாலம் வழியே போக்குவரத்து தடை பட்டுள்ளதால் ஆற்றின் ஒரு கரையில் உள்ளவர்கள் மறுகரையில் உள்ள ஊர்களுக்கு 20 கிலோமீட்டர் சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments