அமெரிக்காவில் ஹுண்டாய் மற்றும் கியா மோட்டார் நிறுவனங்களுக்கு ரூ 15,500 கோடி அபராதம்
விற்கப்பட்ட கார்களின் எஞ்சின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்வதில், தாமதம் ஏற்பட்டதற்காக அமெரிக்காவில் சுமார் 15 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அபராதம் செலுத்த, கொரிய கார் நிறுவனங்களான ஹுண்டாயும் அதன் துணை நிறுவனமான கியா மோட்டார்சும் ஒப்புக் கொண்டுள்ளன.
விற்ற வாகனங்களை திரும்ப பெற்று குறிப்பிட்ட கோளாறை சரி செய்வதில் இந்த நிறுவனங்கள் தாமதம் ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. அது தொடர்பாக நடந்த விசாரணையின் முடிவில் அது உண்மை என்பது உறுதியானது.
அதை அடுத்து அபராத தொகையை செலுத்த இரண்டு நிறுவனங்களும் ஒப்புக் கொண்டன என அமெரிக்க தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த 2015, 2017 ஆம் ஆண்டுகளில் விற்கப்பட்ட வாகனங்களில் கோளாறு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
Comments