நேபாளத்தின் உட்கட்சி அரசியலில் சீனா தலையிட வேண்டாம் - பிரதமர் சர்மா ஒளி
நேபாளத்தின் உட்கட்சி அரசியலில் தலையிடாமல் ஒதுங்கி இருக்கும்படி சீனத் தூதரை நேபாளப் பிரதமர் சர்மா ஒளி கேட்டுக்கொண்டுள்ளார்.
நேபாளக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிரதமர் சர்மா ஒளிக்கு எதிராக, முன்னாள் பிரதமர் புஷ்ப கமல் பிரசண்டா தலைமையில் மற்றொரு குழு செயல்படுகிறது.
கட்சியில் பிளவு ஏற்படுவதைத் தடுக்க நடுநிலையாளராக இருந்து செயல்படச் சீனா விரும்புகிறது.
இந்நிலையில் தங்கள் கட்சியில் ஏற்படும் விரிசலைச் சரிசெய்யத் தங்களால் இயலும் என்றும், பிற நாடுகளின் உதவி தேவையில்லை என்றும் சீனத் தூதர் ஹூ யான்கியிடம் நேபாளப் பிரதமர் சர்மா ஒளி தெரிவித்துள்ளார்.
இந்தக் கண்டிப்பான பேச்சு சீனாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments