பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 6 ஆயிரம் கன நீர் வெளியேற்றம்

0 1020
பூண்டி நீர்த்தேக்கத்தில் இருந்து 6ஆயிரம் கன நீர் வெளியேற்றம்

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 6ஆயிரம் கன அடி வீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

35 அடி மொத்த உயரம் கொண்ட பூண்டி ஏரி நீர்மட்டம் 33 அடியை தாண்டிய நிலையில், பாதுகாப்பு கருதி நேற்று மாலையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்று வினாடிக்கு ஆயிரம் கன அடியாக இருந்த உபரிநீர் வெளியேற்றம், இன்று காலை 6 ஆயிரம் கன அடிவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக உள்ள 16 மதகுகளில் 6 மதகுகள் வழியாக உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நீர்வரத்து வினாடிக்கு 7ஆயிரம் கன அடி வீதமாக உள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments