நெல்லையில் மகன்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் தாய் தற்கொலை செய்த வழக்கு : குற்றம்சாட்டப்படும் பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்

0 3796
நெல்லையில் மகன்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால் தாய் தற்கொலை செய்த வழக்கு : குற்றம்சாட்டப்படும் பெண் காவல் ஆய்வாளர் இடமாற்றம்

நெல்லை மாவட்டம் சுத்தமல்லியில் மகன்களை விசாரணைக்கு அழைத்துச் சென்றதால், போலீசார் முன் தாய் தீக்குளித்து தற்கொலை செய்த வழக்கில், புகாருக்கு ஆளான காவல் ஆய்வாளர் சென்னை கடலோர காவல்படை குழுமத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

மகன்களை விசாரணைக்கு அழைத்துச் சென்ற போது, தட்டிக்கேட்ட தாய் சகுந்தலாவை, காவலர்கள் தாக்கியதாகவும், அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் புகார் எழுந்தது.

கடந்த 23-ம் தேதி நடந்த இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில் புகாருக்கு ஆளான சுத்தமல்லி காவல் நிலைய ஆய்வாளர் குமாரி சித்ராவை சென்னை கடலோர காவல் படை குழுமத்திற்கு மாற்றம் செய்து, டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

இருப்பினும், ஆய்வாளர் குமாரி சித்ரா பணியிடம் மாற்றம் வேண்டி கடந்தமாதமே விண்ணப்பித்து இருந்ததாகவும், அதன் அடிப்படையில்தான் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments