நிரம்பி வழியும் மதுராந்தகம் ஏரி..!

0 1805
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிவதால் 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2411 ஏக்கர் பரப்பளவும், 23.3 அடி கொள்ளளவும் கொண்ட மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம், நிவர் புயல் காரணமாக கடந்த சில நாள்களாக பெய்த கனமழையால் தொடர்ந்து உயர்ந்து வந்தது. இந்நிலையில் அந்த ஏரி நிரம்பி வழிந்து வருகிறது. ஏரிக்கு வினாடிக்கு 267 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில், 236 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது.

மதுராந்தகம் ஏரியின் நீர் இருப்பு அளவு 694 மில்லியன் கன அடியாகும். அதை விட சிறிது கூடுதலாக ஏரியில் மொத்தம் 700 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. இருப்பினும் தற்போதைக்கு ஷட்டர் மூலம் தண்ணீர் வெளியேற்றபடாது என்று பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கையாக கரையோர கிராமங்களான கத்திரிசேரி, பூதமங்கலம், முள்ளி, முன்னூத்திகுப்பம், வளர்பிறை, வீரணகுண்ணம், முருகச்சேரி, தச்சூர், குன்னத்தூர், தோட்டநாவல், கினார், மேட்டுகாலனி, கே.கே.புதூர், பூண்டிநகர், ஈசூர், மலைபாளையம், இருசாமநல்லூர், பாத்திமாநகர், சகாயநகர் உள்ளிட்ட 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments