கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளப் போவதில்லை - பிரேசில் அதிபர்
தாம் கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளப் போவதில்லை என்று பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் பேசிய அவர், தடுப்பு மருந்தை எடுத்து கொள்வதும் கொள்ளாத தும் தம்முடைய தனிப்பட்ட உரிமை என்றும் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்து இடத்தில் பிரேசில் உள்ளது.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் சிகிச்சைக்கு பின்னர் குணம் அடைந்தார். அப்போது கொரோனாவைப் பற்றி கவலைப்படாமல் முகக்கவசம் அணியாமல் சுற்றி வந்து மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என்று கூறியதற்கு உலக சுகாதார அமைப்பு எதிர்ப்பை தெரிவித்து இருந்த து குறிப்பிடத்தக்கது.
Brazil’s president Jair Bolsonaro said he will not take a coronavirus vaccine, calling it his ‘right.’ Bolsonaro added that Congress was unlikely to mandate that Brazilians take the vaccine https://t.co/FGs20QJcWo pic.twitter.com/bEDJbT0P1V
— Reuters (@Reuters) November 27, 2020
Comments