இஸ்ரோ- ரஷ்யா செயற்கைக் கோள்கள் அருகருகே வந்ததால் பரபரப்பு

0 4721
இஸ்ரோ- ரஷ்யா செயற்கைக் கோள்கள் அருகருகே வந்ததால் பரபரப்பு

இஸ்ரோ -ரஷ்யா அனுப்பிய இரண்டு செயற்கைக் கோள்கள் விண்ணில் மோதுவதைப் போல மிகவும் அருகருகே வந்ததால் விஞ்ஞானிகளிடையே பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய செயற்கைக் கோளான கார்ட்டோசாட் 2 எப் சுமார் 700 கிலோ எடை கொண்டது. இது ரஷ்யாவின் கானோபஸ் வி விண்கலத்துக்கு மிகவும் அருகே வந்தது.

இரண்டு செயற்கைக் கோள்களுக்கும் 224 மீட்டர் இடைவெளியே இருந்தது. இதனால் ஆபத்து ஏற்படுமா என விஞ்ஞானிகள் பரபரப்பு அடைந்தனர்.

விண்ணில் செயற்கைக்கோள்களுக்கு இடையே குறைந்தது ஒரு கிலோ மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இது தொடர்பான அச்சம் எழுந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் சிவன், இஸ்ரோவின் செயற்கைக் கோளை நான்கு நாட்களாக கண்காணித்து வருவதாகவும் அதனை முன்னகர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments