முதலமைச்சருடன் பிரதமர் பேச்சு... நிவர் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்

0 1477
முதலமைச்சருடன் பிரதமர் பேச்சு... நிவர் புயல் பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்

நிவர் புயல் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் தமிழக அரசுக்கு உதவ மத்தியக் குழுவை அனுப்புவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

நிவர் புயலால் தமிழகத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து, பிரதமர் மோடி நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியைத் தொடர்பு கொண்டு கேட்டறிந்தார். அப்போது, தமிழ்நாட்டிற்குத் தேவையான உதவிகளைச் செய்ய பிரதமர் உறுதி அளித்ததாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடைய பிரதமர் அலுவலகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என்று அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் உதவ மத்திய குழுக்கள் தமிழகத்திற்கு அனுப்பப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments