சென்னை ஐஐடி தொடங்கும் மின் இயக்கப் பேருந்து... புதிய சார்ஜிங் முறை. புதிய சகாப்தம்.

0 6241
ஐஐடி சென்னை, ஒரு புது வித சார்ஜிங் தொழிநுட்பத்துடன் கூடிய மின்சார பேருந்தை விரைவில் இயக்க இருக்கிறது.

ஐஐடி சென்னை, ஒரு புது வித சார்ஜிங் தொழிநுட்பத்துடன் கூடிய மின்சார பேருந்தை விரைவில் இயக்க இருக்கிறது.இந்த மின்சார பேருந்து, ஐஐடி வளாகத்தில் மாணவர்களுக்கும் பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி பணியாளர்களுக்கும் இயங்கும் .

ஹிட்டாச்சி ஏபிபி பவர் கிரிட்ஸ் நிறுவனம், அசோக் லேலண்ட் நிறுவனத்துடனும் சென்னை ஐஐடியுடனும்  இந்த மின் இயக்க திட்டத்திற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.

இதற்கான உள்கட்டமைப்புகளை ஐஐடி வழங்க,  ஃபிளாஷ் சார்ஜிங் என்ற புதிய தொழிற் நுட்பத்தை அசோக் லேலண்ட் வழங்க ஹிட்டாச்சி நிறுவனம் இந்த மின்சாரப் பேருந்தை நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது.

வாகனங்களை மின் இயக்க முறையில் இயக்குவது இந்தியாவில் இன்னும் ஆரம்பக்கட்ட நிலையிலேயே உள்ளது. 2030 ம் ஆண்டுக்குள்ளாக 30 சதவீதம் வாகனங்களை மின் இயக்கத்திற்கு கொண்டு வரும் திட்டம் இருந்தாலும் பயணிகள் வாகனங்களை மின்சாரத்தில் இயக்குவது என்பது விரைவில் கைகூடாத விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

ஏனெனில், பேருந்துகளை மின்சாரத்தில் இயக்கினால் அதிகமான பயணிகளை ஏற்றிச்செல்வதும், அதிக தூரம் பயணம் செய்வதும் இயலாத காரியம். அது லாபகரமானதாகவும் இருக்காது. இந்த நிலையில், இப்போது அறிமுகப்படுத்தப்படும் ஃபிளாஷ் சார்ஜிங் தொழிற்நுட்பம், இந்த பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வாக அமைவதோடு மக்கள் அதிகம் உள்ள இடங்களில் மாசு கட்டுப்பாட்டுக்கும் பயன்படும் என்று ஐஐடி சென்னை தன் அறிக்கையில் கூறியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments