கொரோனா அச்சுறுத்தல்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்குத் தடை
திருவண்ணாமலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாளையும், நாளை மறுநாளும், கோவிலுக்கு வர, பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். விழா தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன், பக்தர்கள் கோவிலுக்குள் வர 2 நாட்களுக்கு தடை விதிக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
வெளியூர் பக்தர்கள் ஊருக்குள் வருவதைத் தடுக்க, திருவண்ணாமலை நகரைச் சுற்றிலும் 15 இடங்களில், காவல்துறை சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது மகா தீபத்தன்று மலை ஏறவும், கிரிவலம் செல்லவும், தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.
கொரோனா அச்சுறுத்தல்: திருவண்ணாமலையில் பக்தர்களுக்குத் தடை #KaarthigaiDeepam | #ThiruvannamalaiDeepam | #Devotes | #COVID19 https://t.co/d9NW5JVbFd
— Polimer News (@polimernews) November 27, 2020
Comments