தண்ணீரில் மிதக்கும் செம்மஞ்சேரி

0 2437
சென்னை செம்மஞ்சேரியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை காலத்தில் தண்ணீருடன் கண்ணீர் சிந்தி வாழ்க்கை நடத்தும் மக்களின் வேதனையை பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னை செம்மஞ்சேரியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மழை காலத்தில் தண்ணீருடன் கண்ணீர் சிந்தி வாழ்க்கை நடத்தும் மக்களின் வேதனையை பதிவு செய்கிறது இந்த செய்தி தொகுப்பு..

பருவ மழை காலங்களில் வெள்ளத்தால் தவறாமல் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்றாக சென்னையை அடுத்த செம்மஞ்சேரி உள்ளது. மற்ற பகுதிகளில் ஒரு சில நாட்களில் வெள்ளம் வடிந்தாலும் இங்கு மட்டும் விரைவில் தண்ணீர் வடிவதில்லை.

சுனாமியின் போது பாதிக்கப்பட்டவர்கள், அடையாறு, கூவம் ஆறுகளின் கரையோரம் வசித்தவர்களுக்கு இங்கு குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டன. 6800 வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர்.

கனமழையால் தரைதளத்தில் உள்ள வீடுகள் அனைத்தும் வெள்ளத்தில் மிதக்கின்றன. எலக்ட்டிரானிக் பொருட்கள், உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. மழை நீரில் நனைந்து உணவுப் பொருட்கள் வீணாகி விட்டன.

மின்சாரம், குடிநீர், உணவின்றி மக்கள் தவித்து வருகின்றனர். அவ்வப்போது தன்னார்வலர்கள் உணவு வழங்கி வருகின்றனர்.

பெரும்பாலான வீடுகள் சுமார் 200 சதுர அடி பரப்பளவு கொண்ட சிறிய வீடுகள் என்பதால்,

தரை தளத்தில் தண்ணீர் மத்தியில் இருக்க முடியாமல் மக்கள் வீட்டிற்கு வெளியே நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மொட்டை மாடிகளில் தஞ்சம் அடையலாம் என்றால் அதற்கும் படிக்கட்டுகள் கிடையாது.

பாம்பு, விஷ பூச்சிகள் நுழைந்து விடுமோ என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம், பேருந்து நிலையம், பணிமனை என அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

நீர் வழித்தடங்களை ஆக்கிரமித்து, தனியார் நிறுவனங்கள் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டியதும், முறையான மழை நீர் வடிகால் வசதி இல்லாததாலும் தண்ணீர் வெளியேற வழியின்றி செம்மஞ்சேரி பகுதியில் தேங்கி நிற்கிறது.

ஜேசிபி உள்ளிட்ட எந்திரங்களை கொண்டு தண்ணீரை வெளியேற்றும் பணி தற்போது நடைபெறுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி வடிகால்களை முறைப்படுத்தினால் மட்டுமே இது போன்று இன்னலுக்கு மீண்டும் ஆளாகாமல் தடுக்க முடியும்..

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments