மனிதனைப்போல டீ குடிக்கும் கோயில் யானை
தூத்துக்குடியில் யானை ஒன்று டீ குடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி காண்போரை ரசிக்க வைக்கிறது.
ஆழ்வார் திருநகரியில் அமைந்துள்ள ஆதிநாத ஆழ்வார் கோயில் யானையான ஆதிநாயகி தினமும் காலையும், மாலையும் அருகில் உள்ள ஆற்று படுகைக்கு குளிக்க செல்வதும், அங்குள்ள உணவகங்களில் இட்லி, வடை சாப்பிடுவதை வழக்கமாக கொண்டுள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவில், யானை பாகனான அந்த நபர் கடையில் தேநீரை வாங்கி நன்றாக ஆற்றி குவளையில் கொடுக்கிறார். அதனை யானை பருகும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
Comments