அணுசக்தியில் இயங்கும் ராக்கெட் எஞ்சினை வடிவமைத்துள்ள அமெரிக்க நிறுவனம்
விண்வெளி வீரர்களுடன், 3 மாதங்களில் செவ்வாய்க்கு செல்லும் திறன் படைத்த, அணுசக்தியில் இயங்கும் ராக்கெட் எஞ்சினை வடிவமைத்துள்ளதாக அமெரிக்காவை சேர்ந்த யுஎஸ்என்சி வீரர்களுடன் செல்லும் விண்கலத்தில் பயன்படுத்தும் வகையில், இலகுவான, பாதுகாப்பான அணுஉலையை தயாரிப்பது என்பது மிகுந்த சவாலான பிரச்சனை.
செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும்போது, பயண காலம் அதிகரிப்பதற்கு ஏற்ப, காஸ்மிக் ரேடியேசன் எனப்படும் அண்டவெளிக் கதிர்வீச்சின் தாக்கத்திற்கு ஆளாவது அதிகரித்து விண்வெளி வீரர்களின் உடல்நலனுக்கும், பாதுகாப்பிற்கும் ஆபத்து விளைவிக்கும்.
எனவே பயண காலத்தை குறைக்கும் வகையில் விரைந்து செல்ல, அணுசக்தி எஞ்சின்களை பயன்படுத்தலாம் என எலோன் மஸ்க் அண்மையில் பரிந்துரைத்திருந்தார்.
இந்நிலையில், பாதுகாப்பான முறையில் செராமிக் மைக்ரோகேப்ஸ்யூல்களில் யுரேனியம் எரிபொருளை பயன்படுத்தி, 3 மாதத்தில் செவ்வாய் கிரகத்திற்கு செல்லும் வகையில் அணுசக்தியில் இயங்கும் எஞ்சினை தயாரித்திருப்பதாக யுஎஸ்என்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Comments