செய்யாற்றில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு - இரு கரைகளையும் தொட்டுப் பாய்கிறது புதுவெள்ளம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாற்றில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நாட்களில் பெய்த கனமழையால், செண்பகத்தோப்பு அணை அதன் முழு கொள்ளளவை எட்டி, அணையிலிருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
ஜவ்வாது மலையில் பெய்த மழை நீரும் சேர்ந்து செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, இருபுறமும் கரையை தொட்டு பாய்கிறது.
5 ஆண்டுகளுக்கு முன் வர்தா புயலின் போது செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், நிவர் புயல் மழையால் தற்போது வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.
தண்டரை பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையிலிருந்து தற்போது செய்யாற்றில் 6100 கனஅடி நீர் செல்கிறது.
தடுப்பணையில் இருந்து தண்டரை கால்வாய் மூலம் விநாடிக்கு 300 கனஅடி நீர் திருப்பி விடப்படும் நிலையில், அதன்மூலம் 16 பெரிய ஏரிகள் நிரம்பும் என்றும், சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments