நீர்வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவை எட்டுகிறது மதுராந்தகம் ஏரி... உபரி நீர் திறக்கப்பட இருப்பதால் வெள்ள அபாய எச்சரிக்கை
செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள மதுராந்தகம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருப்பதால், கல்லாற்றின் கரையோரம் வசிக்கும் 20 கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக நீர்வரத்து அதிகமாகி 696 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட ஏரியில், 647 மில்லியன் கன அடி நீர் நிரம்பி உள்ளது.
அதனால், உபரி நீர் கிளியாறு எனப்படும் கல்லாற்றின் வழியாக திறக்கப்பட இருக்கிறது. எனவே அதன் இருபுறமும் உள்ள கத்திரிச்சேரி, மேட்டு காலணி உள்ளிட்ட 20 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Comments