மேற்குவங்கத்தில் அதிருப்தி : திரிணாமூல் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி திடீர் ராஜினாமா

0 3306

மேற்குவங்கத்தில் அதிருப்தி திரிணாமூல் காங்கிரஸ் மூத்த அமைச்சர் சுவேந்து அதிகாரி (Suvendu Adhikari) அமைச்சர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இவர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிசேக் பானர்ஜிக்கு கட்சியில்  கொடுக்கப்படும் முக்கியத்துவத்தாலும், தேர்தல் திட்ட வகுப்பாளர் பிரசாந்த் கிசோரின் தலையீட்டாலும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தாம் வகித்த நீர்வளம் மற்றும் பாசனத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை  முதலமைச்சரிடம் இன்று காலை சுவேந்து அளித்துள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments